நிலை தடுமாறிய ஓட்டுநர்; 66 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் தீரச் செயல்

நிலை தடுமாறிய ஓட்டுநர்; 66 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் தீரச் செயல்

1 mins read

அமெரிக்காவில் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயக்கம் அடைந்ததை தொடர்ந்து, உடனடியாக பேருந்தை நிறுத்திய சிறுவனின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த டில்லன் ரீவ்ஸ், மிச்சிகனின் வாரனில் உள்ள கார்ட்டர் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பள்ளிப் பேருந்தில் 66 மாணவ மாணவிகள் சென்றுள்ளனர்.

அப்போது வண்டியை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் ஆகியிருக்கிறது. அவரால் தொடர்ந்து வண்டியை ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே தான் பேருந்தை நிறுத்தப்போவதாக மைக்கில் அறிவித்துள்ளார்.

பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவன் டில்லன், ஓட்டுநர் தடுமாறுவதைக் கவனித்தான். அப்போது உடனே தாவிக் குவித்து ஓட்டுநர் அருகே வந்த மாணவன் முதலில் வண்டியை நிறுத்தினான்.

பின்னர் 911 என்ற அவசர எண்ணுக்கு யாராவது அழையுங்கள் எனக் கத்தினான்.

உடனே அங்கு வந்த போலிஸ், தீயணைப்புப் படையினர் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் நிலை தடுமாறியபோது துணிச்சலாகச் செயல்பட்டு சிறுவன் வண்டியை நிறுத்தும் காணொளி, இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Watch on YouTube