நீண்ட வரிசையில் காத்திருந்து எலிசபெத் அரசியாரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

நீண்ட வரிசையில் காத்திருந்து எலிசபெத் அரசியாரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

1 mins read

லண்டன்: இங்கிலாந்து அரசியார் இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் கடந்த 8ஆம் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

-

அவரது இறுதி சடங்கு வரும் 19ஆம் தேதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

-

அரசியாருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கள்கிழமை மாலையில் இருந்தே பல கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

-

ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19ஆம் தேதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.