நீளமான தாடி: கின்னஸ் சாதனை

நீளமான தாடி: கின்னஸ் சாதனை

1 mins read

உலகில் ஆக நீளமான தாடி வைத்துள்ளவர் என்ற தனது சாதனையையே தானே முறியடித்துள்ளார் கனடாவைச் சேர்ந்த திரு சர்வான் சிங்.

இப்போது இவரது தாடியின் நீளம் 8 அடி மூன்று அங்குலம் (2.54 மீட்டர்).

கடந்த 2008ஆம் ஆண்டில் இவரது தாடியின் நீளம் 2.33 மீட்டராக இருந்தது. அப்போதே கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற இவர், தொடர்ந்து அச்சாதனையைத் தக்கவைத்து வருகிறார்.

பின்னர் 2010ஆம் ஆண்டில் இவரது தாடி 2.595 மீட்டராக வளர்ந்தது.

-

சீக்கியரான திரு சர்வான், தமது தாடியை வெட்டியதே இல்லை.

"17 வயதில் தாடி வளரத் தொடங்கியதில் இருந்து, அதனை அப்படியே விட்டுவிட்டேன்," என்றார் திரு சர்வான்.

தம் தாடியில் உள்ள ஒவ்வொரு முடியின்மீதும் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் இவர், "இது எனக்குக் கடவுள் அளித்த பரிசு," என்கிறார்.

Watch on YouTube