பாரிசின் சிறந்த 'பகெட்' விருதை தர்‌ஷன் செல்வராஜா வென்றார்

1 mins read

பகெட் என்னும் ரொட்டி வகை பிரான்சில் மிகவும் பிரபலம்.

பாரிசில் சிறந்த பகெட்டை யார் விற்கிறார் என்று அங்கு கடந்த 30 ஆண்டுகளாகப் போட்டி நடத்தி வெற்றியாளருக்குச் சிறப்புப் பரிசு கொடுத்து கெளரவப்படுத்தப்பட்டு வருகிறது.

இம்முறை நடத்தப்பட்ட பாரிசின் சிறந்த 'பகெட்'க்கான விருதை 37 வயது தர்‌ஷன் செல்வராஜா வென்றார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பாரிசுக்கு வந்த தமக்கு இவ்விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக தர்‌ஷன் கூறினார்.

வெளிநாட்டவராக இங்கு வந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன், தமது பெயர் வெற்றியாளர் பட்டியலில் இருந்ததைக் கண்டவுடன் தாம் அழத் தொடங்கியதாகவும் தர்‌ஷன் குறிப்பிட்டார்.

1,122 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். 15 பேர் நடுவராக கலந்துகொண்டு பகெட்டை சுவைத்து வெற்றியாளரைத் தேர்வு செய்தனர்.

30 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. யுனஸ்கோவின் தொட்டுணரப்படாத மரபுடமை பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது.

தர்‌‌‌ஷனின் பகெட்டை சுவைக்க வேண்டுமானால் 20ஆவது அரொன்டிசமெட்க்குச் செல்லலாம்.

Watch on YouTube