ஆபாசப் பட ஊழலில் சிக்கிய பிபிசி படைப்பாளர்

ஆபாசப் பட ஊழலில் சிக்கிய பிபிசி படைப்பாளர்

1 mins read
4630b030-1237-43ad-9922-e8fc4b18e326
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்திப்படைப்பாளர் ஹூ எட்வர்ட்ஸ் பேசுகிறார். - கோப்பு படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிபிசி படைப்பாளரும் தன் கணவருமான ஹூ எட்வர்ட்ஸ் பாலியல் ரீதியான புகைப்படங்களைப் பதின்ம வயதினர் ஒருவரிடமிருந்து பத்தாயிரக்கணக்கான பவுண்டு கொடுத்து பெற்றவர் என அவருடைய மனைவி புதன்கிழமை தெரிவித்தார்.

எட்வர்ட்ஸின் மன ஆரோக்கியத்தையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் எட்வர்ட்ஸின் பெயரை வெளியிட்டதாக அவருடைய மனைவி விக்கி ஃபிளிண்ட் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக எட்வர்ட்ஸ் கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருவாட்டி.ஃபிளிண்ட் முன்னதாக ஒரு அறிக்கையில் பிபிசியிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

”கடந்த சில நாள்களில் நடந்த நிகழ்வுகளால் அவருடைய மனநிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்,” என திருவாட்டி. ஃபிளிண்ட் மேலும் தெரிவித்தார்.

பிபிசி அந்தப் படைப்பாளரின் பெயரை வெளியிடாமல் அவரைப் பணியிடைநீக்கம் செய்தது. இணையத்தில் யூகங்கள் பரவியதை அடுத்து, பல பிபிசி நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கும் அந்த விவகாரங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்