பைடன்: "புட்டின் போர்க் குற்றவாளி"

பைடன்: "புட்டின் போர்க் குற்றவாளி"

1 mins read

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "போர்க் குற்றவாளி" எனச் சாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது திரு பைடன் டக்கென்று அவ்வாறு கூறினார்.

திரு பைடன் திரு புட்டினை இவ்வாறு வருணித்துள்ளது இதுவே முதல் முறை.

"கொடூரமான ஆட்சியாளரின் அநாகரிக செயல்களின் படங்களை" தொலைக்காட்சியில் கண்ட திரு பைடன், அமெரிக்க அதிபர் மனத்தில் இருப்பதைப் பேசிவிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் கூறியது.

திரு பைடனின் வார்த்தைகள் ஏற்கத்தகாதவை என்று என்று திரு புட்டினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சாடியுள்ளார்.

"உலகில் நூறாயிரக்கணக்கானோரைக் குண்டுகளால் கொன்ற ஒரு நாட்டின் தலைவராக இருந்துகொண்டு அவர் அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாதது, என்று திரு பெஸ்கோப் கூறினார்.

"போர்க் குற்றவாளி" என்று திரு பைடன் திரு புட்டினைக் குறிப்பிட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் மோசமாகும் என்று கருதப்படுகிறது.