மயாமி: அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் 126 பேர் இருந்த விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்துக்கொண்டது.
நேற்றுமுன்தினம் மாலை நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ரெட் ஏர் எனும் விமானத்தின் நிறுவனம் அது. தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொளுந்துவிட்ட எரிந்த நெருப்பும் கறும்புகையும் சூழ, தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் சறுக்கி நின்றதை சமூக ஊடகங்களில் உள்ள காணொளிகள் காட்டின.

