ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படச் செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.
புதுடெல்லியைச் சேர்ந்த இவர் கடந்த 2018ல் புலிட்சர் விருது வென்றார். பிரசித்திபெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பணியாற்றினார். கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் தீவிரமாக இருந்த காலத்தில் இவரது புகைப்படங்கள் வேகமாகப் பரவி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சித்திக்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
-

