மெக்சிகோ சிட்டி: மனிதகுல வரலாற்றில் ஆக முக்கியமான கண்டுபிடிப்பு தன்னுடையது என்கிறார் செய்தியாளரும் ‘பறக்கும் தட்டுகள்’ குறித்த ஆர்வலருமான மெக்சிகோவைச் சேர்ந்த திரு ஹய்மே மௌசான், 70.
ஆனால், விஞ்ஞானிகள் பலரும் அதை நிராகரிக்கின்றனர்.
இந்த வாரத் தொடக்கத்தில், தான் கண்டெடுத்தவற்றை மெக்சிகோ நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார் மௌசான்.
கண்ணாடி மூடிகளைக் கொண்ட இரண்டு பெட்டிகளில் ‘வேற்றுலகவாசிகளின்’ சடலங்கள் கொண்டுவரப்பட்டன.
அவை மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. மனிதர்களைப்போல் இரு கண்கள், ஒரு வாய், இரண்டு கைகள், இரண்டு கால்களுடன் காணப்பட்டன.
பெருவில் 2017ஆம் ஆண்டு வாக்கில் அவற்றைக் கண்டெடுத்ததாக மௌசான் கூறுகிறார். ஏறத்தாழ 1,000 ஆண்டுப் பழைமையான அந்த சடலங்களில் ஒன்று ஒரு பெண்ணின் சடலம் என்கிறார் அவர்.