யாழ்ப்பாணம் அனைத்துலக வர்த்தக கண்காட்சியில் புதிய உடன்பாடுகள் கையெழுத்து

யாழ்ப்பாணம் அனைத்துலக வர்த்தக கண்காட்சியில் புதிய உடன்பாடுகள் கையெழுத்து

1 mins read

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 12வது அனைத்துலக வர்த்தக கண்காட்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

வடஇலங்கை, தென்னிலங்கை தொழில்முனைவோருக்கு இடையே இந்தக் கண்காட்சியில் பல்வேறு புதிய வர்த்தக உடன்பாடுகள் எட்டப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் முற்றவெளியில் ஜனவரி 21 முதல் 23ஆம் தேதிவரை நடைபெற்ற இந்தக் கண்காட்சி, சிறிய, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை வடஇலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான தளமாக அமைந்துள்ளது.

விவசாயம், கல்வி, உணவு, இயந்திரங்கள், கட்டுமானம், பயனீட்டாளர் பொருள்கள், மின்னியல் சாதனங்கள் உள்ளிட்ட பல தொழில்துறை நிறுவனங்களும் இந்தச் சந்தையில் பங்கேற்றன.

அத்துடன், கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து லங்கா கண்காட்சி, மாநாட்டுச் சேவைகள் (எல்ஈசிஎஸ்) எனும் அமைப்பு இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அனைத்துலக வர்த்தக மன்றம், கைத்தொழில், வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கீகாரம் வழங்கின.

Watch on YouTube