ராஜபக்‌‌சே: பதவி விலகமுடியாது, இடைக்கால அரசுக்கும் நான்தான் பிரதமர்

ராஜபக்‌‌சே: பதவி விலகமுடியாது, இடைக்கால அரசுக்கும் நான்தான் பிரதமர்

1 mins read

இலங்கையில் இதுவரை காணாத அளவு பொருளியல் நெருக்கடி நிலவுகிறது. அதனையொட்டி இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்றும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்றும் பொதுமக்களிடையே போராட்டம் வலுத்து வருகிறது.

எனினும் அந்த கோரிக்கையை ராகபக்சே நிரகரித்தது மட்டும் அல்லாமல் அப்படி இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் அதற்கும் தாம்தாம் தலைமை வகிக்கவேண்டும் என்று ராஜபக்சே கூறியுள்ளார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை," என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு தாமே தலைவன் என்றும் அவர் கூறினார்.

-

இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கமொன்று நிறுவப்படுமே என்றால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ராஜபக்சே கூறினார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான டளஸ் அழகபெரும கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.