விடுப்பு எடுக்க நேரமில்லை: பணிபுரியும் மருத்துவமனையிலேயே மணம் புரிந்த மருத்துவர், தாதி

விடுப்பு எடுக்க நேரமில்லை: பணிபுரியும் மருத்துவமனையிலேயே மணம் புரிந்த மருத்துவர், தாதி

1 mins read

சீனாவில் மருத்துவர் ஒருவருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் அறையில் பணிபுரியும் தாதி ஒருவக்கும் இடையே கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 16) திருமணம் நடந்தேறியது. ஆனால், இவர்கள் மணம் புரிந்த இடமோ, இவர்கள் பணிபுரியும் மருத்துவமனையில்.

மருத்துவப் பணியில் மூழ்கியுள்ள இத்தம்பதிக்கு வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள நேரமில்லாததால், மருத்துவமனை வளாகத்திலேயே இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இத்தம்பதியுடன் பணிபுரியும் சக ஊழியர்களே இந்த எளிமையான திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நடைபாதையையும் 'மணமக்கள்' அறையையும் இந்த வைபவத்திற்காக அவர்கள் அலங்கரித்து வைத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வார்களா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், திருமணத்தின்போது இத்தம்பதி மருத்துவமனை உடையை அணிந்திருந்ததைப் பார்த்தால், திருமண நாளுக்குப் பிறகும் வேலையில் பம்பரம்போல சுற்றுவார்கள் எனத் தெரிகிறது.

-