வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புவோம்: எர்துவான்

வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புவோம்: எர்துவான்

1 mins read

இஸ்­தான்­புல்: துருக்கி நில­ந­டுக்­கத்­தில் இடிந்து விழுந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வீடு­கள் மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பப்­படும் என்று துருக்­கிய அதி­பர் ரெச்­சப் தய்­யிப் எர்­து­வான் சூளு­ரைத்­துள்­ளார்.

வர­லாற்­றில் மறக்க முடி­யாத மற்ற இயற்­கைப் பேரி­டர்­க­ளைப்­போ­லவே துருக்கி இதை­யும் கடந்­து­வி­டும் என்று அவர் உறுதி தெரி­வித்­தார். துருக்­கித் தலை­நகர் ஆங்க்­ரா­வில் அமைச்­ச­ர­வைச் சந்­திப்­பில் பேசிய திரு எர்­து­வான், "இந்­தப் பேரி­டர், நூற்­றாண்­டின் பேரி­ட­ராக அழைக்­கப்­ப­டு­கிறது. இறு­தி­வரை எங்­கள் போராட்­டத்தை நாங்­கள் தொடர்­வோம்," என்­றார்.

நில­ந­டுக்­கத்­தில் இது­வரை 35,000க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்; குறைந்­தது ஒரு மில்­லி­யன் பேர் வீடு­களை இழந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வீடு­களை மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பு­வதை அர­சாங்­கம் அதன் இலக்­கு­களில் ஒன்­றாக நிர்­ண­யித்­துள்­ள­தாக திரு எர்­து­வான் கூறி­னார்.

"இன்­னும் ஓராண்­டில் வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்­கான பணி­க­ளைத் தொடங்க நாங்­கள் இலக்கு கொண்­டுள்­ளோம். கடந்த பல ஆண்­டு­களில் நில­ந­டுக்­கத்­தா­லும் வெள்­ளத்­தா­லும் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் வீடு­க­ளைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­தைப்­போ­லவே இம்­மு­றை­யும் நாங்­கள் செய்­ய­வுள்­ளோம்," என்­றார் அவர்.

ரிக்­டர் அள­வில் 7.8 எனப் பதி­வான நில­ந­டுக்­கம், 1939க்குப் பிறகு துருக்­கி­யில் அதி­க­மா­னோ­ரின் உயிர்­க­ளைப் பலி­வாங்­கிய நில­ந­டுக்­க­மா­கும். இடிந்து விழுந்த வீடு­களை மீண்­டும் கட்­டி­யெ­ழுப்ப பத்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

"இந்த தேசம் பல இயற்­கைப் பேரி­டர்­க­ளைக் கடந்து வந்­துள்­ளது. அதே­போல இதை­யும் நாங்­கள் கடந்து செல்­வோம்," என்­றார் திரு எர்­து­வான்.