வூஹானுக்கு முன் கிருமி வேறிடத்தில் பரவி இருக்கும்: சீனா

வூஹானுக்கு முன் கிருமி வேறிடத்தில் பரவி இருக்கும்: சீனா

1 mins read

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்­குக் கார­ண­மான கிருமி வூஹா­னில் கண்­ட­றி­வ­தற்கு முன் னர் வேறெங்­கா­வது பரவி இருக்­க­லாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னக் குழு­வும் சீன நிபு­ணர் குழு­வும் இணைந்து தெரி­வித்­துள்­ளன. 2019ஆம் ஆண்டு இறு­தி­யில் வூஹா­னில் கிரு­மிப் பர­வல் கண்­ட­றி­யப்­ப­டு­வ­தற்கு முன்­னர் அங்கு அதற்­கான எந்­த­வொரு தட­ய­மும் இல்லை என சீனா­வின் சுகா­தார ஆணை­யத்­தின் நிபு­ணர் டாக்­டர் லியாங் வேனி­யன் கூறி­னார்.

கிருமி தோன்­றிய விதம் குறித்து விசா­ரணை செய்ய சீனா­வின் வூஹான் நக­ருக்கு வந்த உலக சுகா­தா­ரக் குழு கிட்­டத்­தட்ட ஒரு மாத கால விசா­ர­ணையை முடித்த பின்­னர் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தது. சீனா­வின் சுகா­தார நிபு­ணர்­களும் அக்­கு­ழு­வி­ன­ரு­டன் இணைந்­து­கொண்­ட­னர்.

மேலும் இந்­தக் கிருமி விலங்­கி­டம் இருந்து மனி­த­னுக்­குப் பர­வி­யதா என விசா­ர­ணை­யில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றும் டாக்­டர் லியாங் தெரி­வித்­தார்.

விலங்­கி­டம் இருந்து மனி­த­னுக்கு கிருமி பர­வும் சாத்­தி­யம் இருந்­த­போ­தி­லும் கொவிட்-19 விவ­கா­ரத்­தில் அது குறித்த அடை­யா­ளம் தென்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தைச் சேர்ந்த டாக்­டர் பீட்­டர் பென் எம்­ப­ரெக் கூறு­கை­யில், தங்­க­ளது குழு­வி­னர் நடத்­திய விசா­ர­ணை­யில் புதிய தக­வல்­கள் கிடைத்­த­போ­தி­லும் அது கிரு­மி பர­விய விதத்­திற்கு மாறா­ன­தாக இல்லை என்­றார்.

"வௌவால்­கள் வாழும் இயற்கை வனப் பகு­தி­யில் இருந்து கொரோனா கிருமி தோன்றி இருக்­க­லாம் என்­ப­தனை அறிய விசா­ரணை நடத்­தப்­பட்­டது. ஆயி­னும் அந்த இடம் வூஹான் நக­ரில் இருப்­ப­து­போ­லத் தெரி­ய­வில்லை," என்­றார் அவர்.