தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மில்டன் சூறாவளியால் 2 மில்லியன் மக்கள்மின்சாரம் இல்லாமல் தவிப்பு

2 mins read
781e46a0-9184-4731-b7b3-5b2f5f10724d
ஃபுளோரிடாவில் உள்ள லேக்லாண்டில் அக்டோபர் 9ஆம் தேதி மில்டன் நெருங்கும் வேளையில் குடையுடன் ஒரு பெண் பாதுகாப்பான இடத்தைத் தேடி செல்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

தம்பா: மில்டன் சூறாவளி, ஃபுளோரிடா மீது பாய்ந்ததில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. அடுத்தடுத்த சூறாவளி அம்மாநிலத்தைத் தாக்கியது. இதில் தம்பா நேரடித் தாக்குதலிலிருந்து தப்பியது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக மணிக்கு 205 கிலோ மீட்டர் வரை ஆக்ரோஷமான காற்று வீசக்கூடிய சூறாவளி புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் சியஸ்டா கீக்கு அருகே நிலச்சரிவை ஏற்படுத்தியது என்று தேசிய சூறாவளி ஆய்வகம் தெரிவித்தது.

தெம்பாவுக்கு தெற்கே 70 மைல் தொலைவில் அழகிய கடற்கரைகள் உள்ள சியஸ்டா கீயில் ஏறக்குறைய 5,500 பேர் வசித்து வருகின்றனர்.

ஃபுளோரிடாவில் புதன்கிழமை இரவு 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடு, வர்த்தகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் ஹார்டி பகுதி, அதன் பக்கத்தில் உள்ள சரசோட்டா, மனாட்டி ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டன.

மில்டன் தாக்குவதற்கு முன்பே ஃபுளோரிடா முழுவதும் தொடர்ந்து சூறாவளி வீசியது. இதில் ஃபுளோரிடாவின் அட்லாண்டிக் கடலோர ஃபோர்ட் பியர்சுக்கு அருகே உள்ள ஸ்பானிஷ் லேக்ஸ் கவுன்டி வெகுவாகப் பாதிக்கப்பட்டதில் வீடுகள் சேதமடைந்து சில குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

“நாங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்துவிட்டோம்,” என்று செயின்ட் லூயிஸின் ஷெரிஃப் கீத் பீயர்சன் டபிள்யூபிபிஎஃப் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

தம்பா பே சூறாவளியிலிருந்து தப்பியிருந்தாலும் அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட தம்பா பே பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய வானிலை நிலையம் கூறியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டும் 16 அங்குலத்துக்கு மழை பெய்தது.

குறிப்புச் சொற்கள்