நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரவுவிடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் காயமைடைந்தனர்.
இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை நியூயார்க்கின் குவீன்ஸ் பகுதியில் இருக்கும் அமாசுரா இரவுவிடுதிக்கு வெளியே நிகழ்ந்தது.
இரவுவிடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த கும்பலை நோக்கி மூன்று அல்லது நான்கு ஆடவர்கள் 30 தடவைக்கும் மேல் துப்பாக்கியால் சுட்டனர்.
தாக்குதல் நடத்திய பிறகு துப்பாக்கிக்காரர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்தோரில் ஆறு பேர் பெண்கள், நால்வர் ஆடவர்கள்.
அவர்கள் அனைவரும் குணமடைந்து வருவதாகக் காவல்துறை கூறியது.
இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

