தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10,000 ர‌ஷ்ய வீரர்களுடன் போராட்டம்: உக்ரேன் ராணுவத் தளபதி

1 mins read
7b1c0b74-f906-43f5-974b-1acb88098428
மூவாண்டாகத் தொடரும் போரில் ர‌ஷ்யா வீரர்களை எதிர்த்துப் போராடுகின்றனர் உக்ரேனிய வீரர்கள். - படம்: இபிஏ

கியவ்: ர‌ஷ்யாவின் கிர்ஸ் வட்டாரத்தில் ஏறக்குறைய 10,000 ர‌ஷ்ய வீரர்கள் சண்டையிடுவதாக உக்ரேனின் உயர் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 90 சதுர கிலோமீட்டர் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிர்ஸ்க் வட்டாரத்தில் உக்ரேனின் ராணுவ நடவடிக்கையால் டொனெட்ஸ்க் வட்டாரத்துக்குள் ர‌ஷ்ய வீரர்கள் அனுப்பபடுவதைத் தடுக்க முடிந்ததாக ராணுவத் தளபதி குறிப்பிட்டார். அங்குக் கிட்டத்தட்ட மூவாண்டுகளாகக் கடுமையான போர் நடைபெறுகிறது.

இருப்பினும் ர‌ஷ்ய ராணுவம் உக்ரேனிய நகரங்கள்மீது ஆளில்லா வானூர்தி மூலமும் ஏவுகணைகளைப் பாய்ச்சியும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ர‌ஷ்யாவால் பாய்ச்சப்பட்ட 82 விழுக்காட்டு ஆளில்லா வானூர்திகளை இதுவரை அழித்திருப்பதாக உக்ரேனிய ராணுவம் குறிப்பிட்டது.

இருப்பினும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் நகரங்களையும் பாதுகாக்க தரையிலிருந்து வான் நோக்கி பாயும் ஏவுகணைக் கட்டமைப்புகள் தேவை என்று அது கூறியது.

இலகுவான விமானங்களையும் ஆளில்லா வானூர்திகளை இடைமறிக்கும் கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் ஆகாயப் படை கவனம் செலுத்துவதாகவும் உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே வரை உக்ரேன் $1.3 பில்லியனுக்கும் அதிகமான நேரடி இழப்பை எதிர்கொண்டதாக உக்ரேன் சொன்னது.

குறிப்புச் சொற்கள்
உக்ரேன்ர‌ஷ்யாபோராட்டம்போர்