கிரீன்காஸல்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திருடர்கள் ஒரே மளிகைக் கடையில் இருந்தது 40,000 அமெரிக்க டாலர் (S$54,000) மதிப்புள்ள 100,000க்கும் மேற்பட்ட முட்டைகளைத் திருடியுள்ளனர்.
கிரீன்காஸலில் உள்ள பீட் & ஜெரியிஸ் ஆர்கனிக்ஸ் கடையின் லாரியில் இருந்து பிப்ரவரி 1 அன்று திருடர்கள் திருடியதாக காவல்துறை தெரிவித்தது.
பறவைக்காய்ச்சல் தொற்று காரணமாக அங்கு முட்டைவிலை உயர்ந்துள்ளது.
முட்டை விலை கடந்த ஆண்டில் 65%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2025ல் கிட்டத்தட்ட 20% அதிகரிக்கும் என்று வேளாண் துறை முன்னுரைத்தது.
2022ல் பரவத் தொடங்கிய பறவைக் காய்ச்சல் தொற்று அண்மைய மாதங்களில் அமெரிக்கா முழுவதும் பரவியதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் விலைகள் 8 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.
அமெரிக்காவெங்கும் பறவைகள், கால்நடைகள், பாலூட்டிகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று பரவியுள்ளது.

