வீட்டுத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 102 பாம்புகள்

1 mins read
a41a0195-b058-4294-ba55-48f4e782a525
பாம்புகளை பிடித்து பையில் போடும் போது இரண்டு பாம்புகள் குஞ்சு பொறித்தன.  - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அருகில் உள்ள பகுதியில் வீட்டுக்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் இருந்து 102 நச்சுப் பாம்புகள் பிடிபட்டன.

வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 7) தமது தோட்டத்தில் இரண்டு பாம்புகள் உள்ளதாக அதன் உரிமையாளர் உதவிகேட்டு அதிகாரிகளுக்கு அழைத்தார்.

இரண்டு பாம்புகள் என்று நினைத்து சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

நான்கு முதல் ஐந்து பாம்புகள் இருக்கும் என்று நினைத்த அதிகாரிகள் ஒரு புதரில் பல பாம்புக் குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

40க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த அவர்கள் ஒரு கட்டத்தில் எண்ணுவதை நிறுத்திவிட்டு வேலையில் மும்முரமாக இறங்கினர்.

பாம்புகளை பிடித்து பையில் போடும் போது இரண்டு பாம்புகள் குஞ்சு பொறித்தன. இறுதியில் 102 பாம்புகள் பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிபட்ட அனைத்தும் ரெட் பெல்லிட் பிளாக் (Red-bellied black) பாம்புகள். அவற்றின் நச்சுத் தன்மை குறைவாக இருக்கும் இருப்பினும் அது கடுமையான வலி, வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்