கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க தளவாடங்கள்

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க தளவாடங்கள்

1 mins read
c8958635-e048-40a5-9d53-1e21d4e1423f
-

சோல்: தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் தென்கொரியாவுக்கு கூடுதலாக அமெரிக்க விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுப்பு வது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா சென்ற வாரம் சோதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பி=52 ரக போர் விமானத்தை தென்கொரியாவுக்கு உயரே பறக்கவிட்டது.

ணுவாயுதத்தை எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க பி-52 ரக விமானத்தை அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு அனுப்பியது அனைத்துலக ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.