வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கு கொவிட்-19

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கு கொவிட்-19

1 mins read
826b6afe-e859-417e-b570-e48facd66edb
சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில் வெளிநாட்டிலிருந்து வந்த பயணி. படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் -

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட 11 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (பிப்ரவரி 18) உறுதி செய்யப்பட்டது.

அதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,832 ஆகியுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்ததும் கட்டாயம் சீராலஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நடப்புக்கு வருவதற்கு முன்பு இங்கு வந்த நால்வர், சிங்கப்பூருக்கு வந்த பிறகு பரிசோதனைகளுக்கு உட்படத் தேவையில்லாத அறுவர் ஆகியோரும் இந்த 11 பேரில் அடங்குவர்.

உள்ளூர் சமூகத்திலோ, ஊழியர் தங்குவிடுதியிலோ புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.

நேற்று உள்ளூர் சமூகத்தில் தொற்றுக்கு ஆளான ஒரே நபர் இந்தோனீசியாவிலிருந்து வேலை அனுமதி அட்டையுடன் இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்.

நேற்றைய நிலவரப்படி 59,646 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் உட்பட 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.