கசிந்த நீராவியால் உயிரிழந்த 11 மாதக் குழந்தை

கசிந்த நீராவியால் உயிரிழந்த 11 மாதக் குழந்தை

1 mins read
0edb7355-8b75-4811-aedc-ac0ee478a655
புரூக்ளின் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் ரேடியேட்டரிலிருந்து நீராவிக் கசிந்ததால் அந்த வெப்பத்தால் குழந்தை ஒன்று இறந்தது. - படம்: இணையம்

நியூயார்க்: அமெரிக்காவின் புரூக்ளின் வீட்டுப் படுக்கை அறையில் ‘ரேடியேட்டர்’ (கதிரியக்கக் கருவி) ஒன்றிலிருந்து நீராவி கசிந்ததை அடுத்து, அந்தச் சூட்டில் 11 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டது.

சம்பவம் ஜனவரி 19ஆம் தேதியன்று நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வீட்டை அடைந்தபோது அங்கு அந்தக் குழந்தை காயங்களுடன் பேச்சுமூச்சின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரேடியேட்டரிலிருந்து நீராவி கசிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இறந்த குழந்தையின் அம்மா, இன்னொரு பிள்ளைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக அறியப்படுகிறது.

இவ்வாறு நீராவிச் சூட்டால் காயம் ஏற்படும் சம்பவங்கள் வழக்கமாகத் தொழிற்பேட்டைகளில்தான் நடந்துள்ளன. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பு நேர்வதும் அரிது.

இதற்குமுன், 2016ஆம் ஆண்டில் ஒரு வயது, இரண்டு வயது சகோதரிகள் இருவர் ரேடியேட்டர் நீராவிச் சூட்டால் கடுமையாகக் காயமடைந்து உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைஉயிரிழப்புவெப்பம்கசிவுகாயம்