தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசைப்படகுடன் 11 மீனவர்களை இலங்கைப் படை சிறைபிடித்தது

1 mins read
7801df66-3ca7-4d23-bd53-085fd70b3d6b
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ராமேசுவரம்: ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மீனவர்கள் நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 11 மீனவர்களை விசைப் படகுகளுடன் சிறைப் பிடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்காக அவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விசாரணைக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்