நியூயார்க்: உறவினர்கள் இருவரைக் கொன்றதாக 11 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லுயிசியானா மாநிலத்தின் மின்டன் நகரின் முன்னாள் மேயரான 82 வயது ஜோ கோர்னிலியஸ் சீனியரையும் அவரது மகளான 31 வயது கேய்ஷா மைல்சையும் அச்சிறுவன் கொன்றதாக நம்பப்படுகிறது.
இருவரது உடல்களும் திரு ஜோ கோர்னிலியஸ் சீனியரின் வீட்டில் செப்டம்பர் 1ஆம் தேதியன்று கண்டெடுக்கப்பட்டன.
இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு 500,000 அமெரிக்க டாலர் (S$654,000) பிணை வழங்கப்பட்டது. ஆனால் பிணைத் தொகை செலுத்தப்படாததால் அவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மின்டன் காவல்துறைத் தலைவர் ஜெரட் மெக்கைவர் செப்டம்பர் 3ஆம் தேதியன்று கூறினார்.
சிறுவனின் வயதைக் காரணம் காட்டி அவனது பெயரை அவர் வெளியிடவில்லை.
சம்பவ இடத்தில் இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்வதாக திரு மெக்கைவர் கூறினார்.
கொலைக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.