வாஷிங்டன்: பன்னிரண்டு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தடை உத்தரவு சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 9) நண்பகல் 12.01 மணிக்கு நடப்புக்கு வருகிறது.
பயணத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், புருண்டி, கியூபா, லாவோஸ், சியேரா லியோன், டோகோ, துர்மெனிஸ்தான், வெனிசுவேலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்குப் பகுதியளவு கட்டுப்பாடு விதிக்கப்படும்.
அமெரிக்காவுக்குள் குடிநுழைவைக் கட்டுப்படுத்த திரு டிரம்ப்பின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பயணத் தடை அமைகிறது.