ஆஸ்திரேலியாவில் சிங்டெல்லின் ‘ஆப்டஸ்’ சேவைத் தடையால் 120,000 பேர் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் சிங்டெல்லின் ‘ஆப்டஸ்’ சேவைத் தடையால் 120,000 பேர் பாதிப்பு

1 mins read
986f785d-fea0-406c-a0cd-b4cc7709aec3
முன்னதாக, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) சேவைத்தடையால் ஆப்டஸ் பயனாளர்கள் ஏறத்தாழ 220,000 பேர் பாதிக்கப்பட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9), ‘ஆப்டஸ்’ கைத்தொலைபேசிச் சேவைத் தடையால் ஏறக்குறைய 120,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ‘ஆப்டஸ்’, சிங்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

சேவைத் தடை குறித்து அறிந்திருப்பதாக ‘ஆப்டஸ்’ கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

“வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசியில் ‘சேவை இல்லை’ என்ற வாசகத்தையோ ‘SOS’ என்றோ பார்த்தால் கைப்பேசியை ஒருமுறை அணைத்துவிட்டு மீண்டும் அதை இயக்கத் தொடங்கவும்,” என்று ‘ஆப்டஸ்’ நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பங்காளித்துவ நிறுவனமான ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் இதன் தொடர்பில் இணைந்து செயலாற்றுவதாகக் கூறிய ‘ஆப்டஸ்’ பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதைக் காண முடிவதாகத் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளைச் செய்ய இயல்வதாகவும் அது கூறியது.

முன்னதாக, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) சேவைத்தடையால் ஆப்டஸ் பயனாளர்கள் ஏறத்தாழ 220,000 பேர் பாதிக்கப்பட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எண்ணிக்கை 120,000ஆகக் குறைந்தது.

சேவைத் தடைக்கான காரணம் தெரியவில்லை.

கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 18ஆம் தேதி, தொழில்நுட்பக் கோளாற்றை அடுத்து ஏற்பட்ட ‘ஆப்டஸ்’ சேவைத் தடையால் மூவர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்