குமாமோட்டோ: ஜப்பானின் கியூஷூ தீவை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஆகக் கடைசி நிலவரப்படி 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி தெரிவித்துள்ளார்.
ரிக்டரில் 7.1 அளவிலான நிலநடுக்கம் அப்பகுதியை உலுக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்னும் பலர் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருப்பதாக திருவாட்டி தக்காய்ச்சி குறிப்பிட்டார்.
அதற்கான நேரம் குறைந்துகொண்டேவருவதாகவும் அவர் சொன்னார்.

