தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடத்தப்படவிருந்த தங்கையை கவணை வைத்து காப்பாற்றிய 13 வயது சிறுவன்

1 mins read
b067b46d-079a-4baf-b87a-61977f65acf4
படம்: பிக்சாபே -

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் கடத்தப்படவிருந்த 8 வயது தங்கையை கவணை வைத்து காப்பாற்றியுள்ளான் 13 வயது சிறுவன்.

வீட்டிற்கு பின்னால் உள்ள பகுதியில் சிறுமி காளான்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது மதிக்கதக்க நபர் சந்தேகம் வரும் விதமாக நடந்துகொண்டார்.

திடீரென சிறுமியின் வாயை அடைத்து கடத்தல் முயற்சியில் இறங்கினார் அந்த ஆடவர். சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல அவர் திட்டமிட்டார்.

தங்கையை கடத்த வந்த ஆடவரைக் கண்ட 13 வயது சிறுவன் உடனடியாக தமது கவணை எடுத்து சந்தேக நபரைத் தாக்கத் தொடங்கினான்.

தலை, நெஞ்சு, கண் என சந்தேக நபரின் உடலில் தாக்கினான் சிறுவன். வலி தாங்க முடியாமல் அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

குடும்ப உறுப்பினர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, சந்தேக நபரை அதிகாரிகள் விரைவாக அடையாளம் கண்டு கைது செய்தனர்.

விசாரணையில் சந்தேக நபர் தாம் சிறுமியைக் கடத்த முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்