செர்பியா ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் மரணம்

1 mins read
dbb5a10d-accc-4e86-bb64-cb79fd59cb89
செர்பியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான நோவி சாட்டில் உள்ள அந்த ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த இருக்கைகளில் சிலர் அமர்ந்திருந்தபோது கான்கிரீட்டால் செய்யப்பட்ட மேற்கூரை அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக செர்பிய ஊடகம் தெரிவித்தது. - படம்: இபிஏ

பெல்கிரேட்: செர்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழந்ததில் குறைந்தது 14 பேர் மாண்டதாக அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் விசிச் தெரிவித்தார்.

மாண்டோரில் சிறுமி ஒருவரும் அடங்குவார்.

அவருக்கு ஆறு அல்லது ஏழு வயதுதான் இருக்கும் என்று அதிபர் விசிச் கூறினார்.

உயிரிழந்தவர்களில் ஐவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார் அவர்.

செர்பியாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான நோவி சாட்டில் உள்ள அந்த ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த இருக்கைகளில் சிலர் அமர்ந்திருந்தபோது கான்கிரீட்டால் செய்யப்பட்ட மேற்கூரை அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக செர்பிய ஊடகம் தெரிவித்தது.

காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள்.

சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் 2021ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு இவ்வாண்டிலும் அங்கு புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்த துயரச் சம்பவம் காரணமாக நவம்பர் 2ஆம் தேதியன்று செர்பியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த அசம்பாவிதத்துக்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் விசிச் சூளுரைத்திருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்