தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை தடுப்புக் காவலில்141 இந்திய மீனவர்கள்

2 mins read
4d774350-1b36-4cce-a1f3-3615d83280db
இந்திய மீனவர்களின் நிலவரம் குறித்து இந்திய அரசாங்கம் விவரங்களை வெளியிட்டுள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இலங்கையில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 45 பேர்மீது வழக்கு விசாரணையை எதிர்நோக்குவதாக வியாழக்கிழமை அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு வெளியுறவுத் துணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

இவ்வாண்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 351 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் தாயகம் திருப்பியனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்திய மீனவர்கள் அப்போதைக்கு அப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது.

அவர்கள் அனைத்துலக எல்லையைத் தாண்டி இலங்கை கடலில் மீன் பிடிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை உள்ளடக்கி மீன்வளம் தொடர்பான இருதரப்பு கூட்டுப் பணிக்குழுவின் வழக்கமான கூட்டங்கள், மீனவர்கள் தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

“தற்போது கிடைத்துள்ள தகவலின்படி 2024 நவம்பர் 22ஆம் தேதி இலங்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 141 மீனவர்களில் 45 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 96 பேர் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

“கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நமது தூதரகம், மீனவர்களுக்குத் தூதரக, சட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

“அரசதந்திர முயற்சிகளின்மூலம் இவ்வாண்டு கைது செய்யப்பட்ட 351 மீனவர்களை அரசாங்கம் விடுவித்து தாயகம் கொண்டுவந்தது. மேலும், 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் கொண்டு வரப்பட்டனர்,” என்றும் மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கு இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்