விபத்தில் 15 ராணுவ வீரர்கள் காயம்

விபத்தில் 15 ராணுவ வீரர்கள் காயம்

1 mins read
0ccf6544-eb03-44fd-8da5-3de72f7817b0
மலேசியாவில் நிகழ்ந்த வாகன விபத்தில் 15 வீரர்கள் காயம் - படம்: என்எஸ்டி
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் ராணுவ வாகனம் ஒன்று, சுங்கக் கட்டணச் சாவடிமீது மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

சுங்கை பேசி-உலு கேலாங் உயர்த்தப்பட்ட விரைவுச் சாலையில் (எஸ்யுகேஇ) வெள்ளிக்கிழமை (மே 1) மாலை 4.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுங்கக் கட்டணச் சாவடிமீது மோதியதாக அம்பாங் ஜெயா காவல்துறை அதிகாரி கைரூல் அனுவார் காலித் கூறினார்.

வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த 15 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர் என்று ஓர் அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.

ராணுவ வாகனம் சுங்கை பேசி முகாமிலிருந்து கோலா கூபு பாருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக திரு கைரூல் சொன்னார்.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மலேசியாவில் இத்தகைய குற்றத்திற்கு 15,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது 12 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிபத்துராணுவம்