தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கு ஈராக்கில் 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

2 mins read
f9e01361-f199-4130-9508-3f88954974aa
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒழித்துக்கட்ட ஈராக்கில் கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க துருப்புகள் உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவும் ஈராக் அதிகாரிகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்காவை சேர்ந்த 7 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக வா‌ஷிங்டன் ஆகஸ்ட் 30ஆம் தேதி தகவல் வெளியிட்டது.

இந்த தாக்குதல், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களை குறிவைத்து ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாலை நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. மேலும் இதில் எந்த ஒரு பொதுமக்களும் கொல்லப்பட்டவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட போது பயங்கரவாதிகளிடம் பல ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருந்தன. மேலும் உடலில் கட்டிக்கொள்ளும் உயிர் மாய்த்தல் வெடிகுண்டுகளையும் அவர்கள் கட்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராக்கிய அதிகாரிகள் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்த இடம் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

“ஈராக் வட்டாரத்திற்கும் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக உள்ளனர். அமெரிக்காவும் ஈராக் படைகளும் இணைந்து பயங்கரவாதிகளை தொடர்ந்து ஒழித்துகட்டுவோம்,” என்று வா‌ஷிங்டன் தெரிவித்தது.

இந்த கூட்டு நடவடிக்கையை செயல்படுத்த இரண்டு நாடுகளும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்கப்படையினர் தங்கள் நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறுவார்கள் என்று ஈராக் கூறிவருகிறது. இருப்பினும் அது எப்போது நடக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

ஈராக்கில் கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க துருப்புகள் உள்ளன. சிரியாவில் 900 அமெரிக்க துருப்புகள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒழித்துக்கட்ட அனைத்துலக அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் அந்த துருப்புகள் அங்குள்ளன.

குறிப்புச் சொற்கள்