ஆஸ்திரேலியர், அமெரிக்கர்களைக் கொன்றவர்களுக்கு மெக்சிகோவில் 158 ஆண்டுகள் சிறை

ஆஸ்திரேலியர், அமெரிக்கர்களைக் கொன்றவர்களுக்கு மெக்சிகோவில் 158 ஆண்டுகள் சிறை

படம்: சர்பிராஜம் / விக்கிபீடியா

17 Oct 2026 - 4:36 pm

1 mins read

மெக்சிகோ சிட்டி: ஆஸ்திரேலியச் சகோதரர்கள் இருவரையும் அவர்களின் அமெரிக்க நண்பரையும் கொன்ற மூவருக்கு மெக்சிகோவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் 158 ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அலையாடலுக்காக 2024ஆம் ஆண்டு மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா மாநிலத்துக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பயணம் மேற்கொண்போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

எல் கெக்காஸ் என்றழைக்கப்படும் ஜேசுஸ்‌ ஜெரார்டோ, ஐரினியோ ஃபிரான்சிஸ்கோ, ஏஞ்சல் ஜேசுஸ் ஆகியோர்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றங்கள் உள்ளிட்டவை ஒரு வாரத்துக்கு முன்பு நிரூபிக்கப்பட்டன. திருட்டு, வன்முறை கலந்த திருட்டு உள்ளிட்ட குற்றங்களும் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்தன.

கொல்லப்பட்டவர்கள், ஆஸ்திரேலியச் சகோதரர்களான ஜேக் ராபின்சன், 33, கலம் ராபின்சன், 30, அவர்களின் அமெரிக்க நண்பர் ஜேக் ரோட், 30, ஆகியோர் ஆவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி, பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டதாக பாஜா கலிஃபோர்னியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வன்முறை கலந்த மோசமான திருட்டு, வன்முறை வாகனத் திருட்டு ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட கிசல் சில்வா என்ற பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வழக்கு துரிதமாக நடத்தப்பட்டது.

கொல்லப்பட்ட வெளிநாட்டவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு சில நாள்களுக்குப் பிறகு, அப்போது 23 வயதாகியிருந்த அப்பெண் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்