சேமிப்புக் கணக்குகளிலிருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் சுருட்டல்; வங்கி அதிகாரிகள் இருவர் உட்பட ஐவர் கைது

1 mins read
49703b1f-93f9-4905-8de7-a74beb256dfb
மாதிரிப்படம்: - ஊடகம்

கோலாலம்பூர்: மற்றவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் (S$6.94 மி.) பணத்தைச் சுருட்டிய மோசடிக் கும்பலுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, வங்கி அதிகாரிகள் இருவர் உட்பட ஐவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ராம்லி முகம்மது யூசூஃப் திங்கட்கிழமையன்று (ஜூன் 17) செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, சேமிப்புக் கணக்குகள் குறித்த விவரங்களைக் கூறி, மோசடிக் கும்பலுடன் சதி செய்து, 24.2 மில்லியன் ரிங்கிட் பணத்தை எடுக்க உதவிய சந்தேகத்தின்பேரில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 13) வங்கிப் பணியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பில் இம்மாதத் தொடக்கத்தில் காவல்துறைக்கு நான்கு புகார்கள் வந்ததாகத் திரு ராம்லி கூறினார்.

கோத்தா கினபாலு மற்றும் சாபாவில் நிரந்தர வைப்புத்தொகைக் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் கூறி, பணத்தைப் பறிகொடுத்த வாடிக்கையாளர்கள், பெட்டாலிங் ஜெயா மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த வங்கிப் பணியாளர்களிடமிருந்து அந்தப் புகார்கள் வந்ததாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்