கடலில் கைவிடப்பட்ட $584 மில்லியன் மதிப்புள்ள 2 டன் போதைப்பொருள்

கடலில் கைவிடப்பட்ட $584 மில்லியன் மதிப்புள்ள 2 டன் போதைப்பொருள்

1 mins read
3bd0f882-7da2-4ef2-95e6-9fdc57abc66c
படம்: ஏஎஃப்பி -

இத்தாலியில் 2 டன் எடைகொண்ட போதைப்பொருள்கள் கடலில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு கிட்டத்தட்ட 584 மில்லியன் வெள்ளி என்று அதிகாரிகள் கூறினர்.

இத்தாலியின் சிஸிலி கடற்கரைப்பகுதியில் அது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடலோரக் காவல்படை அதிகாரிகள் பொட்டலங்கள் மிதந்து வருவதை கண்டனர்.

சரக்குக் கப்பலில் வந்து போதைப்பொருள்களைப் பெரிய பொட்டலங்களாக மாற்றி, கடலில் இருந்து கரைக்கு கொண்டு செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

70 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அந்த 2 டன் போதைப்பொருள் இத்தாலி வரலாற்றில் பிடிபட்ட ஆக அதிகமான போதைப்பொருள் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்