92 சிறை கைதிகள் தப்பி ஓட்டம்

92 சிறை கைதிகள் தப்பி ஓட்டம்

1 mins read
Google News Preferred Icon

சாவ் பாலோ: பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது நேற்று முன்தினம் அதிகாலையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் சிறைச்சாலைக் குள் புகுந்த கும்பல் போலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்று 92 கைதிகளைத் தப்பிக்க வைத்தனர். பிரேசிலின் வடகிழக்குப் பகுதி யில் ரொமேயூ கோன்கால்வ்ஸ் அப்ரான் டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பலதரப்பட்ட குற்றங் கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளன ர்.

இதனால் அங்கு பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் உள்ளன. இருப்பி னும் அவற்றை மீறி ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கு அடைத்து வைக் கப்பட்டிருந்த 92 கைதிகளைத் தப்பி க்க வைத்தனர். முன்னதாக 20 பேர் கொண்ட கும்பல் நான்கு வாகனங்களில் சிறைச்சாலை வாசலில் வந்து இறங்கினர். அவர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை வைத் தி ருந்ததாகக் கூறப்பட்டது. அதன் மூலம் சிறையின் முன்பக்க நுழை வாயிலை உடைத்து நொறுக்கினர்.