அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் 17 வயது ஆண்கள் இருவர் மாண்டனர்.பாலம் இடிந்து விழுந்தபோது அவர்கள் ஒரு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. கெடாவின் தீ மற்றும் மீட்புப் பிரிவுக்கு இச்சம்பவம் குறித்து இரவு 10.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இடிபாடுகளின் அடியில் சிக்கியிருந்த இரு பதின்ம வயதினரையும் மீட்க 11 தீயணைப்பாளர்கள் அரும்பாடுபட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அந்த இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளத்தை போலிஸ் உறுதிப்படுத்தவில்லை.
மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பதின்ம வயதினர் பலி
1 mins read

