கெஅடிலான் ராக்யாட் கட்சித் (பிகேஆர்) தலைவராகத் தேர்ந்- தெடுக்கப் பட்டிருக்கும் திரு அன்வார் இப்ராஹிம் நாடாளு- மன்றம் திரும்ப நோக்கம் கொண்டு இருக்கும் வேளையில் அவர் எந்தத் தொகுதியில் போட்டி- யிடு வார் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. மலேசியாவின் போர்ட் டிக்- சனில் நடைபெறவிருக்கும் இடைத் தேர் தலில் அவர் போட்டி யிடவுள் ளார். அவர் போட்டியிடு வதற்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள போர்ட் டிக் சன் நாடாளு மன்றத் தொகுதி காலி செய்து கொடுக் கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியா னது.
அந்தத் தொகுதியில் இடைத்- தேர்தல் நடைபெறுவதற்கு ஏது வாக கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டானியல் பால கோபால் அப்துல்லா தமது பதவி விலகலை பெட்டாலிங் ஜெயாவில் செய்தி யாளர் கூட்டம் ஒன்றில் அறிவித்து இருக்கிறார். அதன் மூலம் திரு அன்வார், மலேசிய நாடாளுமன்றத்திற்குத் திரும்பி பின்னர் மலேசியாவின் அடுத்த பிரதமராக வழிவகுக்கப்- படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "போர்ட் டிக்சன் வாக்காளர்கள் எனக்கு வழங்கிய அதே அளவு, அல்லது அதற்குக் கூடுதலான ஆதரவை அவர்களது எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினருக்கு நல்க வேண்டும் என நான் விரும்பு- கிறேன்," என்று திரு டானியல் கூறினார்.

