சூச்சி அம்மையாரைச் சாடிய அன்வார்

சூச்சி அம்மையாரைச் சாடிய அன்வார்

1 mins read

மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி அம்மையார் ரோஹிங்யாக் களை நடத்தும் விதம், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை போன்ற வற்றுக்கு திரு அன்வார் கண்டனம் தெரிவித்துள்ளார். சுமார் 700,000 ரோஹிங்யாக் கள் மியன்மாரின் ராக்கைன் மாநிலத்திலிருந்து பங்ளா தே‌ஷுக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து, ஐநாவின் அகதிகள் மேம்பாட்டு முகவைகள் முதன் முறையாக ராக்கைன் பகுதியில் நேற்று பணியைத் தொடங்கின.

மியன்மார் அரசாங்கத்துடன் அவ்வமைப்பு மேற்கொண்ட ஒப் பந்தத்தின் அடிப்படையில் மேம் பாட்டுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரோஹிங்யாக்கள் மீதான மியன்மார் ராணுவத்தின் செயல் பாடுகளுக்கு கண்டனங்கள் வலுக்கும் வேளையில் அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் திருவாட்டி ஆங் சான் சூச்சி கலந்துகொள்ள மாட்டார் என மியன்மார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.