ரத்தான திட்டங்கள்: அன்வார் முதலீட்டாளர்களுக்கு மறுஉறுதி

ரத்தான திட்டங்கள்: அன்வார் முதலீட்டாளர்களுக்கு மறுஉறுதி

1 mins read

ஹாங்காங்: அண்மையில் மலேசியா வால் ரத்து செய்யப்பட்ட பெருந் திட்டங்கள் பற்றிய கவலையில் இருந்த வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு மலேசியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளரான திரு அன்வார் இப்ராஹிம் மறுஉறுதி அளித்திருக்கிறார். முந்தைய நஜிப் அரசால் அனுமதிக்கப்பட்ட, தெளிவற்ற சில குறிப்பிட்ட திட்டங்களை மட்டுமே அரசு மறுஆய்வு செய்வதாகவும் சீனாவை மட்டந்தட்டும் செயலாக அதைக் கருத வேண்டாம் என்றும் திரு அன்வார் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹாங்காங்கில் முதலீட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற திரு அன்வார் புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட் டியில், "டாக்டர் மகாதீர் முயற்சி எடுத்து சீனாவுக்குச் சென்றதுடன் சீனாவுடனான இருதரப்பு உறவு, வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளித் துள்ளார்," என்று குறிப்பிட்டார். சீனாவுடனான சில பெருந்திட் டங்களை ரத்துசெய்வதாகவும் சிங்கப்பூருடனான அதிவேக ரயில் திட்டத்தைத் தள்ளி வைப்பதாகவும் மலேசியா அண்மையில் அறிவித்தது.

நாட்டின் பொருளியல் நிலை தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் பல பெருந்திட்டங்களை ஒரே சமயத்தில் மேற்கொள்ள முடியாது எனும் நாட்டின் கருத்தை டாக்டர் மகாதீர் பிரதிநிதித்துள்ளதாக திரு அன்வார் கூறினார். கடந்த ஈராண்டுகளில் இருந் ததைவிட தற்போதைய நிலை வலுவற்றதாக இருந்தாலும் வலுவற்ற பொருளியல் சூழலை அது எட்டிவிடவில்லை என்றார் அவர். நாடுதான் முக்கியம் என்று கூறிய திரு அன்வார், தற்போதைய சூழலில் கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு டாக்டர் மகாதீர்தான் தம்மைவிடச் சிறந்த பிரதமர் என்றும் குறிப்பிட்டார்.