அச்சுறுத்தும் சூறாவளி; 1 மி. பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

அச்சுறுத்தும் சூறாவளி; 1 மி. பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

1 mins read
a8c9fab8-ca29-4494-a308-964cdc75326a
-
Google News Preferred Icon

வடகரோலினா: மிகவும் வலு வடைந்துள்ள ஃபுளோரன்ஸ் சூறா வளி காரணமாக அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதி களில் பலத்த மழை ஏற்படக்கூடும் என்றும் அதன் காரணமாகக் கடுமையான வெள்ளப்பெருக்கு, மின்சாரம் துண்டிப்பு போன்றவை பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரையோரத்தில் இருக் கக்கூடிய வடகரோலினா, தென் கரோலினா பகுதிகள் புயல்காற்று, அலைகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் உள்நாட்டில் பலத்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தேசிய சூறாவளி மையம் முன்னுரைத்து உள்ளது.

தற்போது மணிக்கு 225 கி.மீ. என்ற வேகத்தில் வீசும் காற்றுடன் நான்காம் நிலைச் சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஃபுளோ ரன்ஸ், மேலும் வலுவடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கரையோரப்பகுதிகளில் வசிக் கும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளனர்.