9 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து; 33 வயது மலேசியர் பலி

9 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து; 33 வயது மலேசியர் பலி

1 mins read

நேற்று முன்தினம் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் 9 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்று நிகழ்ந்ததில் 33 வயது மலேசிய மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். ஆறு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி ஆகியவை துவாஸை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக மாலை 5.19 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக 53 வயது ஆடவர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காரில் இருந்த 26 வயது பயணியும் 29 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரும் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலிசார் கூறினர். விபத்தினால் மூன்று சாலைத் தடங்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. இது குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.