பெய்ஜிங்: தென்சீனாவில், கார் ஒன்று மக்கள் நிறைந்த சதுக்கத்திற்குள் புகுந்ததைத் தொடர்ந்து 11 பேர் மாண்டதுடன் 44 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே இவ்வாறு செய்த கார் ஓட்டுநர், தான் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக சமுதாயத்தின் மீது பழிதீர்க்க எண்ணி கூட்டத்தில் காரைப் புகுத்தியதாக கூறப்படுகிறது. ஹூனான் மாநிலத்தின் ஹெங்யாங் நகரில் உள்ள மிஷுய் என்ற ஊரில் அந்தக் கார், நேற்று முன்தினம் மாலை சதுக்கத்திற்குள் விரைந்து சென்றதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது. யாங் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட அந்த ஓட்டுநர், தனது காரை கூட்டத்திற்குள் வேண்டுமென்றே ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் இருந்து வெளியேறி, மண் வெட்டி, கத்தி ˲கியவற்றைப் பயன்படுத்தி மக்களைத் தாக்கியதாக அதிகாரிகள் கூறினர்.
சீனா கூட்டத்தில் காரை மோதி தாக்குதல்
1 mins read

