ஃபுளோரென்ஸ் சூறாவளியால் கடும் மழை, பெருவெள்ளம்

ஃபுளோரென்ஸ் சூறாவளியால் கடும் மழை, பெருவெள்ளம்

1 mins read
74d1c7e9-c805-4b22-81e1-25366bfbcd8d
-

அமெரிக்காவைப் பெரிதாகப் பயமுறுத்திய ஃபுளோரென்ஸ் சூறாவளி பலவீனமடைந்து விட்டபோதிலும் வடக்கு கெரோலினாவில் பெருமழையையும் பலத்த காற்றையும் உருவாக் கிவிட்டது. சூறாவளியின் வலிமையை வெளிப் படுத்தும் ஐந்து நிலைகளில் ஃபுளோரென்ஸ் ஆகக் குறைந்த முதல் நிலைக்கு நேற்று முன் தினம் இறக்கப்பட்டது. பலவீனமடைந்து ஆகக் குறைந்த வேகத்தில் அச்சூறாவளி மேற்கு நோக்கி மெல்ல நகரத் தொடங்கியதைத் தொடர்ந்து அதன் நிலை கீழிறக்கப்பட்டது. இருந்தபோதிலும் கிழக்குக் கடலோரப் பகுதிகளை அது தாக்கிச் சென்றது.

அதனால் சூறாவளி கடந்து செல்லும் பகுதிகளில் வசிக் கும் மில்லியன்கணக்கான மக்கள் அச்சத் தில் உறைந்தனர். எந்தப் பகுதியை அது கடந்து செல்லும் என்று சரியாகக் கணிக்க முடியாத நிலையில் வடக்கு கெரோலினாவின் கேப் ஃபியர் அருகே அச்சூறாவளி நிலச் சரிவை ஏற்படுத்தும் என்று முன்னுரைக்கப் பட்டது. இந்நிலையில், வடக்கு கெரோலினா, தெற்கு கெரோலினா, வெர்ஜீனியா ஆகிய மாநிலங் களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் பத்திரமான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். வடக்கு கெரோலி னாவில் ஏற்கெனவே பலத்த காற்று மற்றும் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு சாலை களில் இடுப்பளவுக்கு மேல் நீர் தேங்கியுள்ளது.

ஃபுளோரென்ஸ் சூறாவளி ஏற்படுத்திய வெள்ளத்தால் நெயூஸ் ஆற்றின் கரைகளைக் கடந்து ஓடிய நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. வெள்ள நீரில் அடித்துச் செல்லப் பட்ட தங்களது உடைமைகளைத் தேடி எடுத்துச் செல்கின்றனர் இவர்கள். படம்: ஏஎஃப்பி