பிரதமர் பதவிக்கு தாம் அவசரப் படவில்லை என்றும் போர்ட் டிக்சன் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு உள்நோக் கமும் இல்லை என்றும் மலேசியா வின் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாறாக, நாடாளுமன்ற சீர்திருத்தத் திற்கு உதவுவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "எனக்கும் பிரதமர் மகாதீர் முகம்மதுவுக்கும் இடையிலான உறவு சுமுகமானது. இடைத்தேர்த லில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எந்த ஒரு எதிர்மறைச் சிந்தனையும் இன்றி எடுத்தேன், அதன் பிறகு அது பற்றிய அறி விப்பை இரு வாரங்களுக்கு முன் னரே வெளியிட்டுவிட்டேன்," என நேற்று முன்தினம் இரவு மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் தமது கட்சியினரிடம் பேசுகையில் திரு அன்வார் கூறினார்.
"நாட்டு மக்களின் நன்மைக் கான கொள்கைகளை வகுப்பதி லும் சட்ட வரையறைகளை உரு வாக்குவதிலும் எனது கட்சியைச் சேர்ந்த இளம் உறுப்பினர்களுக்கு உதவ நான் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்," என்றார் திரு அன்வார். இந்த விவகாரத்தில் தமது கட்சியினரே தம்மை குறைகூறி னால் அதனைப் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் கூறினார்.
"குறைகூறுவோர் ஒரு குறிப் பிட்ட விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது சில வரையறை களை வகுத்துக்கொள்ள வேண் டும்.

