பிரான்சில் கூட்டத்தின்மீது காரைச் செலுத்தியவர் கைது

2 mins read

நிமா: பிரான்சின் தெற்குப் பகுதியிலுள்ள நிமா நகரில், மதுக்கூடம் ஒன்றிலுள்ள மக்கள் கூட்டத்திற்குள் ஆடவர் ஒருவர் தனது காரை வேண்டுமென்றே ஓட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் அந்த கார், பாதுகாப்புத் தடுப்பு ஒன்றில் மோதியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபர் பிரெஞ்சு நாட்டவர் என நம்பப்படுகிறது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணிக்கு, கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட மக்கள் கூட்டத்திற்குள் அவர் தனது காரை ஓட்டிச் சென்றதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், அந்த வெள்ளைக் கார் இறுதியாக பாதுகாப்புத் தடுப்பு ஒன்றில் மோதியது. காளை மாடுகளை அடக்கும் விழா ஒன்றுக்காக இந்தத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் இருந்தோரில் சிலர், தாக்குதல் நடத்திய ஆடவர் இஸ்லாமிய வாசகங்களை முழங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். ஆயினும், இந்த ஆடவர் தீவிரவாதக் கொள்கை உடையவர் எனப் போலிஸ் அதிகாரிகள் சந்தேகப்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்ற ஆடவரைக் கூட் டத்தினர் தடுத்து வைத்திருந் ததாக அரசாங்க வழக்கறிஞர் எரிக் மவுரெல் தெரிவித்தார். இந்த ஆடவர் கைது செய்யப்பட்டபோது அவர் குழப் பத்தில் இருந்தது போல் காணப் பட்டதாக திரு மவுரெல் கூறினார். இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையா என்பது தற்போது விசாரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் நிஸ் நகரில் பிரான்சின் தேசிய தினம் அன்று 19 டன் எடைகொண்ட லாரி கூட்டம் நிறைந்த பகுதியில் மோதியதில் 87 பேர் கொல்லப் பட்டனர்.