கோலாலம்பூர்: போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் 10 பேர் மலேசியாவில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அந் நாட்டுப் போலிஸ் துறைத் தலைவர் முகம்மது ஃபுஸி ஹரூன் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடையே அவர்கள் சிலாங்கூர், பாஹாங், ஜோகூர், திரங்கானு, கிளந் தான், மலாக்கா, பினாங்கு ஆகிய மாநிலங்களில் பிடிப் பட்டதாக தகவல் வெளிவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு பயங்கரவாதக் குழுக் களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. மத்தியக் கிழக்கிலுள்ள பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து தாக்கு தல்களை நடத்துவது அவர் களின் திட்டம் என்று தெரிவிக் கப்பட்டது.
கைது நடவடிக்கைகளின் முதல் சுற்றில் 'அசோயிப் பெமுடா டாரி திமுர்' என்ற குழுவைச் சேர்ந்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக திரு ஹரூன் தெரிவித்தார். அந்த ஐவர், 39 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அவர் கூறினார். மத்திய கிழக்கிலுள்ள பயங் கரவாதக் குழுவுடன் இணைந்து அவர்கள் பக்கத்து நாடு ஒன்றில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு ஹரூன் கூறினார். அந்த நாடு எது என்பதை அவர் அடையாளப் படுத்தவில்லை. மேலும், இந்நபர்கள் 'ஹடித்' எனப்படும் இஸ்லாமியப் புனித நூலைத் தவறாகப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில், சமய சார்பற்ற நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்த திட்ட மிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டாவது குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடையே கைது செய்யப்பட்டனர். கிளந்தான், மலாக்கா, பினாங்கு ஆகிய இடங்களில் அவர்கள் கைதாயினர்.

