வாஷிங்டன்: ரஷ்ய அரசாங்கம், தனக்கு எதிராக மாறிய உளவாளியை பிரிட்டனில் கொல்ல முயன்றதாகக் கூறும் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு எதிராக மேலும் பல புதிய வர்த்தகத் தடைகளை அறிமுகம் செய்ய திட்ட மிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சு இதனை நேற்று அறி வித்தது. வங்கித்துறை, ஆயுத கொள்முதல், நிதியுதவி ஆகியவற்றின் தொடர்பில் வர்த்தகத் தடைகள் விதிக்கப்படும் என அமைச்சு சொன்னது. இங்கிலாந்தின் செலிஸ்பரி நகரில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு ரஷ்யர்களைக் கடந்த வாரம் அடையாளப்படுத்தி உள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது. இவ்விரு வரும் ஜிஆர்யு ரஷ்ய ராணுவ உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் என பிரிட்டன் கூறியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்தக் குற்றத்திற்கு மூல காரணம் என்று பிரிட்டன் குற்றஞ்சாட்டுகிறது. இருந்தபோதும் ரஷ்யா தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.

