பாஸ்டனில் இயற்கை எரிவாயு வெடிப்பு; ஒருவர் மரணம்

1 mins read

பாஸ்டன்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் நகருக்கு அருகிலுள்ள குடியிருப் புகளில் இயற்கை எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது ஒருவர் இறந்ததாகவும் 12 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிப்புகளில் வீடுகள் உட்பட பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன; அவற்றில் சில தரைமட்டமாயின. நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டி யிருந்தது. சுமார் 50 பிரிவுகளைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள், அடுத்தடுத்து பல இடங்களுக்குச் சென்று தீய ணைக்க வேண்டியிருந்தது. மொத்தம் 70 தீச்சம்பவங்களும் வெடிப்புகளும் ஏற்பட்டதாக மசா சூசெட்ஸ் அதிகாரிகள் தெரிவித் தனர். இந்த சம்பவம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதற்கான எந்த அறி குறியும் தென்படவில்லை என அதி காரிகள் தெரிவித்தனர். எரிவாயுக் குழாய் ஒன்றில் அளவுக்கு மீறிய அழுத்தம், முதல் வெடிப்புக்குக் காரணமாக இருந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீப்பற்றி எரியும் அல்லது புகை சூழ்ந்துள்ள வீடுகளைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.