பிலிப்பீன்ஸ் புயலுக்கு இரு பெண்கள் பலி

பிலிப்பீன்ஸ் புயலுக்கு இரு பெண்கள் பலி

2 mins read

மங்கூட் புயல் கடும் சீற்றமடைந்து வடக்கு பிலிப்பீன்ஸைத் தாக்கி யதைத் தொடர்ந்து நூற்றுக்கணக் கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, ஹாங்காங்=ஜப்பான் விமானச் சேவை பெரிதாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கேத்தே பசிபிக் விமான நிறு வனம் 400 விமானச் சேவைகளை அடுத்த மூன்று நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. கேத்தே டிராகன் நிறுவனமும் தனது சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. இதற்கிடையே, இந்தப் புய லுக்கு இரு பெண்கள் பலியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர். பேங்கியோ நகரில் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாண்ட அவ்விரு பெண்களின் சடலத்தை போலிசார் கண்டதாக வும் அவர்கள் கூறினர். காகயன் மாநில தலைநகரான டுகுவெகராவ் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

"அந்நகரில் கிட் டத்தட்ட எல்லாக் கட்டடங்களும் சேதமடைந்துவிட்டன. கூரைகள் பறந்தோடிவிட்டன. "மின்சாரம் துண்டிக்கப்பட்ட தால் தொலைத்தொடர்பு பாதிக்கப் பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதாகவும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தி ருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவங் கள் மீட்புப் பணிகளைக் கடின மாக்கி உள்ளன," என்று அர சாங்க அதிகாரி ஒருவர் கூறினார். விரைவில் தென்சீனாவையும் மங்கூட் தாக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டது. சீனாவின் ஹைனான், குவாங்டோங் மாநி லங்களை புயல் நெருங்கி வரு வதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து மேற்கு குவாங்டோங், கிழக்கு ஹைனான் ஆகிய பகுதிகளுக்கு இடையில் இன்று இரவு மங்கூட் புயல் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுவதாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது.